திருப்பதியில் தாயுடன் படுத்திருந்த 9 மாத குழந்தைக்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்! மனதை உலுக்கும் சம்பவம்!

சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற பக்தரின் 9 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை பூர்வீகமாக கொண்டவர் சுப்பையா. இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருடைய மகனின் பெயர் மணிகண்டன். மணிகண்டனுக்கு குழந்தை பிறந்தவுடன் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பதாக வேண்டியிருந்தனர். அதுபோன்றே மணிகண்டனுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு 9 மாதமாகியுள்ளது.

கடவுளிடம் வைத்திருந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றனர். அப்போது 955- ஆம் லாக்கரில் தங்களுடைய பெட்டி படுக்கைகளை ஒப்படைத்திருந்தனர். பின்னர் கடவுளை தரிசிப்பதற்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது தூங்கி கொண்டிருந்தவர்களின் அருகில் இருந்த 9 மாத குழந்தையை ஒரு பெண் கடத்தி சென்றுள்ளார்.

சவரத்தொழில் செய்யும் ஒரு பெண் குழந்தை கடத்தலை பார்த்தவுடன் கூச்சலிட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட மணிகண்டன் தன் குழந்தை அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் விரட்டி சென்று அந்த பெண்ணை கண்டு பிடித்தனர். குழந்தையை மீட்டெடுத்து கடத்திய பெண்ணை திருப்பதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் பெயர் பத்மா என்று கண்டுபிடித்தனர்.

அவர் ஏற்கனவே திருட்டு தொழிலில் ஈடுபட்டிருந்தாரா?? இல்லை முதல் முறையாக ஈடுபடுகிறாரா?? இவருக்கும் குழந்தை கடத்தல் குழுவிற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.