கோவை மாவட்டத்தில் பட்டாசு ஆலைக்கு வேலைக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென அதிவேகம்..! கட்டுப்பாட்டை இழந்து மட்ட மல்லாக்க கவிழ்ந்த மினிபஸ்..! 8 பெண்கள் மற்றும் ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் 50 சதவீத ஊழியர்கள் உடன் வேலை துவங்க ஆரம்பித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே இருக்கும் மல்லி, கார்த்திகைபட்டி, மேலத்தொட்டியபட்டி, அப்பநாயக்கன்பட்டி கிராமங்களை சார்ந்த மக்கள் பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த ஆலையில் வேலை செய்வதற்காக வேலையாட்கள் மினி பஸ் மூலமாக சென்று கொண்டிருந்தனர். அப்படியாக இந்த மினி பஸ் ஆனது கோப நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அருகே இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து என்பதற்கான காரணங்களையும் விசாரித்து வருகின்றனநர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது