ஸ்விம்மிங் பூலில் சிக்கிக்கொண்ட 9 அடி முதலையை வெறும் கையால் காப்பாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 அடி நீளம்..! பிரமாண்ட முதலையுடன் ஜலக்கீரிடை! காண்போரை மிரள வைக்கும் தில் இளைஞன்!
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணம் அமைந்துள்ளது. இங்கு பால் பெடார்ட் என்பவர் முதலை காப்பாற்றும் குழுவில் கடந்த 30 வருடங்கள் செயல்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு 9 அடி முதலை ஒன்று ஸ்விம்மிங் பூலில் சிக்கி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. பதறிப்போன இவர் உடனடியாக சம்பவயிடத்திற்கு சென்றுள்ளார்.
ஸ்விம்மிங் பூலில் குதித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு, முதலை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்துள்ளார். சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "இது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அந்த முதலை யானது என்னிடம் இருந்து தப்பிக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. முதலை மிகவும் சாந்தமாகவே இருந்தது"என்று கூறினார்.
முதலையின் எடையானது 180 முதல் 200 பவுண்டுகள் வரை இருந்துள்ளது. எவ்வாறு முதலையை காப்பாற்றினார் என்பது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த செய்தியானது அனைவருக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.