மண்டியிட்டு இரண்டு பேரின் கால்களில் முத்தமிட்ட 82 வயது போப் ஆண்டவர் ! உலகை உலுக்கிய சம்பவம்!

தனது 82 வயதில் மண்டியிட்டு இரண்டு பேரின் கால்களில் போப் ஆண்டவர் முத்தமிட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.


தெற்கு சூடானில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அடுத்த மாதம் ஜனநாயக ரீதியிலான அரசு அமைய உள்ளது. இதனை முன்னிட்டு வாடிகன் நகரில் தெற்கு சூடானின் எதிர்க்கட்சித் தலைவர்கள் போப் ஆண்டவரை சந்தித்துப் பேசினர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தனது உதவியாளரின் உதவியுடன் திடீரென மண்டியிட்ட போப் ஆண்டவர் சூடான் எதிர்க்கட்சித் தலைவர்கள் இரண்டு பேரின் கால்களில் உள்ள ஷூக்களில் முத்தமிட்டார். இதனால் தெற்கு சூடானின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரும் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தனர்.

அப்போது மெல்ல மேலெழுந்த போப் ஆண்டவர் தெற்கு சூடானில் உள்நாட்டு போர் முடிந்து தற்போது தான் அமைதி திரும்பியுள்ளது எனவும் எனவே மீண்டும் போரில் ஈடுபடாமல் தெற்கு சூடான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று உருக்கத்துடன் எதிர்க் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி உலகையே உலுக்கி உள்ளது.

அமைதிக்கான முயற்சியாக இரண்டு பேரின் கால்களில் முத்தமிட்ட போப் ஆண்டவரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.