ஆறே மாதத்தில் கழுத்தில் வளர்ந்த பிரமாண்ட புற்று நோய் கட்டி..! கைவிரித்த மருத்துவர்கள்! 81 வயது முதியவருக்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்..!

நியூ ஜெர்ஸி: 81 வயது முதியவர் கழுத்தில் இருந்து கால்பந்து அளவுக்குக் கட்டியை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.


அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்தவர் மில்டன் விங்கர்ட் (81 வயது). எலக்ட்ரிஷியன் வேலை செய்துவந்த இவர் தற்போது பணி ஓய்வில் உள்ளார். எனினும், அவரது கழுத்தில் டென்னிஸ் பந்து அளவுக்கு திடீரென கட்டி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதனை அகற்ற வேண்டி பல மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்றார்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் மிக சிக்கலான இடத்தில் இருப்பதால், கட்டியை அகற்ற முடியாமல் திண்டாடினர். அது மட்டுமின்றி அவருக்கு ஏற்பட்டுள்ளது பிளியோமார்ஃபிக் சார்கோமா என்னும் திசு கேன்சராகும்.  

இதற்கிடையே நாளுக்கு நாள் கழுத்தில் கட்டி வளர்ந்து, அது கால்பந்து சைஸ்க்கு வந்துவிட்டது. ஒருவழியாக, 6 மாத போராட்டத்திற்குப் பின்னர், அவரை நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பரிசோதித்து, அறுவை சிகிச்சை செய்து ஒப்புக் கொண்டார். உடனடியாக, சிகிச்சையை மேற்கொண்ட அவர் மில்டனின் கழுத்தில் இருந்த கால்பந்து சைஸ் கட்டியை நீக்கி வெளியேற்றினார். இதையடுத்து, தற்போது உடல்நலம் தேறி, நலமுடன் உள்ளதாக, முதியவர் மில்டன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.