கோடி கோடியாக சொத்து இருந்தும் வாழ்வது என்னவோ தெருக்கோடியில் தான்..! 80 வயது முதியவரின் பரிதாப நிலை! அதிர்ச்சி காரணம்!

சேலம் அருகே, 3 மகள் ஒரு மகன் இருந்தும் சொத்துக்காக கேட்டு அடித்து, உதைத்து துன்புறுத்தி பசி, பட்டினியோடு 80 வயது முதியவர் ஒருவர் சாலையோரத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனை அறிந்த தனியார் அமைப்பு ஒன்று மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளது.பணத்துக்கு பாச நாடகம் ஆடிய வருசுகள்.


சேலத்தை அடுத்த ஆர்.கே. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மேலும், ராமசாமிக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளன. இந்நிலையில், மூன்று மகளுக்கும் முதலில் திருமணம் செய்து வைத்து விட்டு. பின்னர் ராமசாமி மகனுக்கு திருமணம் செய்து மருகளுடன் வசித்து வந்தார். 

இதற்கிடையில், மருமகள் வருகையின் காரணமாக அவரின் சதியில் ராமசாமியின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார். மேலும், அவரது மகள்களும் இதனை பற்றி பெரியதாக எடுத்து கொள்ளாமல் கைவிட்டுள்ளார்கள். 

மகள், மகன் செய்கிற கொடுமையை தாங்க முடியாமல் ஒரு கட்டிடத்தில் , இது தொடர்பாக காவல்நிலையம் புகார் அளித்தார். அந்த புகாரில் பெரியதாக நாட்டம் கொள்ளவில்லை. இதனையடுத்து மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் புகாரளித்தும், அவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். 

இதனால் நொந்துபோன ராமசாமி, அவர்கள் கடைசியில் சொத்து தொடர்பான ஆவணங்களை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு சாலையோரத்திலும் பேருந்து நிழற்குடைகளிலும் படுத்துறங்கி, பசி பட்டினியோடு வாழ்ந்து வந்துள்ளார். இவ்வளவு சொத்துக்கு மதிப்பு உள்ள பெரியோரை கண்ட செய்தியாளர்கள் சிலர், உணவு வாங்கிக் கொடுத்து உதவி செய்ததோடு, தனியார் ஆதரவற்றோர் அமைப்பிடம் சேர்த்து விட்டனர்.

மேலும், ராமசாமி இங்கு பத்திரமாக இருப்பதை பச்சமுத்து, அவரது சகோதரிகள் உட்பட முதியவரின் உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசிய போது அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் முதியவர் ராமசாமியின் மிகவும் மணம் நொந்துள்ளார். மேலும், 4 குழந்தைகளை பெற்றும் தெருவில் நிற்கும் கதி யாருக்கும் இனி நடக்க கூடாது என்று வருந்தினார்.