ட்ரம்ப் தலைக்கு 80 மில்லியன் டாலர் பரிசு..! ஈரான் அறிவிப்பு!

அமெரிக்காவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் ட்ரம்ப் ஒரு தீராத தலைவலியாக மாறியுள்ளார்.


அதனால், ட்ரம்ப் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் விலை வைத்துள்ளது. ஈரானின் ரகசியப்படைப் பிரிவின் தலைவர் காசின் சுலைமானி உள்ளிட்ட 9 பேரை அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தி கொலை செய்ததை அடுத்து, உலகெங்கும் பெட்ரோல் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. மேலும், நாங்கள் அவசரப்பட மாட்டோம்.

காத்திருந்து அமெரிக்கா அச்சப்படும் வகையில் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலையில் ஈரான் தொலைக்காட்சியில் மூத்த அதிகாரி ஒருவர் பேசினார். அவர் பேசும்போது, ஈரானில் இப்போது 80 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். அந்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க அதிபர் தலையைக் கொண்டு வருபவருக்கு 80 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் ஆளுக்கு ஒரு டாலர் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. நாங்கள் நினைத்தால் வெள்ளை மாளிகை மீதே தாக்க முடியும் என்று ஈரான் அறிவிபு செய்துள்ளது. இது, உலக நாடுகளை பதட்டம் அடையச் செய்துவருகிறது.