8 வருடம் காதல்! கல்யாணமாகி ஒரே வாரம்! மனைவியால் கணவனுக்கு கிடைத்த விபரீத அனுபவம்!

எட்டு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, திருமணமான 7 நாட்களில் கணவனை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சுரேஷ், வீட்டின் அருகே வசித்து வந்த சோபியா எனும் பெண்ணை 8 வருடங்கள் காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்தார்.  இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வேறொரு பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு இடையே சண்டை வந்ததால், சுரேஷ் சோபையாவை கீழ் ஜாதி பெண் என கூறி இழிவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோபியா அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், சுரேஷ் குமார் மற்றும் அவரது பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். 8 வருடங்கள் காதலித்து, திருமணமான 7 நாட்களில் கணவனை ஜெயிலுக்கு அனுப்பிய சோபியாவை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.