அந்த இடத்தில் வலிக்குதும்மா! கதறிய சிறுமி! டாக்டர்கள் கூறிய பகீர் தகவல்! கோவை பரபரப்பு!

கோவை அருகே 8 வயது சிறுமிக்கு 20 நாட்களாக பாலியல் துன்புறுத்தல் செய்த கோவில் பூசாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி திடீரென வலியால் துடித்ததையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பூசாரியான தண்டபாணி என்பவனை சிறுமி கையைக் காட்டினார். 

ஒரு நாள் மாலையில் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மிட்டாய் தருவதாகக் கூறி கோவிலுக்குள் அழைத்துச் சென்ற 61 வயது தண்டபாணி, அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணை மற்றும் சோதனைகளில் தண்டபாணியின் குற்றம் உறுதி செய்ய்யப்பட்டது.

இதையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தண்டபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 61 வயது நபர் என்பதாலும், கோவில் பூசாரி என்பதாலும் தண்டபாணி மீது பெரிதும் மரியாதை கொண்டிருந்த கிராம மக்கள் அவனது சுயரூபம் தெரிந்து அதிர்ந்துபோய் இருக்கின்றனர்