மளிகை கடைக்கு சென்ற சிறுமியுடன் விடிய விடிய வல்லுறவு! பிறகு நேர்ந்த பயங்கரம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 8 வயதுச் சிறுமியை பாலிய்ல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொன்ற கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.


போபாலின் கமலா நகர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள கடைக்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். 

ஆனால் சிறுமி கிடைக்காததால் அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இரவு பணியில் இருந்த போலீசார் மெத்தனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்டு அவர்கள் கவுன்சிலர் ஒருவரை தொடர்புகொண்டு போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார் அதிகாலை 5 மணியளவில் கழிவுநீர் கால்வாய் ஒன்றில் சிறுமியின் சடலத்தை கண்டெடுத்தனர்.

உடற்கூறு பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துகொன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதனிடையே தாங்கள் புகார் கொடுத்தவுடனேயே தேடத் தொடங்காமல் போலீசார் மெத்தனம் காட்டியதாலேயே தங்கள் குழந்தைக்கு இத்தகைய கொடூரம் நேர்ந்ததாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டும் நிலையில் இரவில் பணியில் இருந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.