எட்டே வயது..! ஒரே ஒரு கை மட்டும் தான்..! 20 நிமிடங்களில் 202..! உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய சிறுமி!

20 நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட செராமிக் டைல்களை உடைத்து சிறுமி சாதனை புரிந்துள்ளது ஹைதராபாத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநகரில் சாருதா என்ற 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் முறையாக கராத்தே பயின்று வருபவர் ஆவார். சமீபத்தில் 20 நிமிடங்களில் 202 செராமிக் டைல்களை ஒற்றை கையால் உடைத்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளார். 

இதுமட்டுமின்றி ஒரு மணி நேரத்தில், பலவகையான வண்ண காகிதங்களின் மூலம் 202 பொம்மைகளையும் செய்து அசத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியானது உலக சாதனையாக   ஏற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் இத்தகைய செயலாற்றல் அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.