காலேஜ் அண்ணாவுடன் தனிமையில் இருந்த பக்கத்து வீட்டு அக்கா..! பார்க்க கூடாததை பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்..! இதனால் அவனுக்கு நேர்ந்த பயங்கரம்!

விளையாட சென்ற 8 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு முட்புதரில் புதைந்து கிடந்த சம்பவமானது ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு உட்பட்ட சொட்டகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுமதி. இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகனின் பெயர் பவனேஷ். கணவன் மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.

சென்ற வியாழக்கிழமை காலையில் வழக்கம்போல கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பவனேஷ் குழந்தைகளுடன் குளத்திற்கு அருகே காலையில் விளையாட சென்றான். விளையாடிவிட்டு அனைத்து குழந்தைகளும் மதிய நேரத்தில் வீடு திரும்பி விட்டன. ஆனால் பவனேஷ் மட்டும் வீட்டிற்கு வரவில்லை.

வேலையை முடித்துவிட்டு வந்த தங்கராஜ் பவனேஷை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனாலும் பவனேஷை அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை இரவன்று ஊத்துக்குளி காவல்நிலையத்தில் தன்னுடைய மகளை காணவில்லை என்று தங்கராஜ் புகாரளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களாலும் பவனேஷை கண்டறிய இயலவில்லை. இந்நிலையில், மறுநாள் காலையில் ஆடுமேய்க்க சென்றவர்கள் முட்புதர் ஒன்றில் குழந்தை புதைக்கப்பட்டிருப்பதாக ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு எடுத்தனர். பின்னர் அது 8 வயது பவனேஷ் தான் என்பதனை காவல்துறையினர் உறுதி செய்தனர். உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உயிரிழந்தது தொடர்பான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சம்பவத்தன்று குழந்தை பருவ வயதை எட்டிய சிறுமி ஒருவருடன் சென்றதாக கண்டறியப்பட்டது. அவ்வாறு சென்றபோது குளத்துக்கு அருகே கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். 

இந்த காட்சியை பவனேஷ் பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவயிடத்தில் காதல் செய்து கொண்டிருந்த பெண் பவனேஷ் வீட்டு அருகே வசித்து வருவதால், இங்கே இந்த செய்தியை தன் பெற்றோரிடம் கூறி விடுவானோ என்று அந்த கல்லூரி மாணவி அச்சமடைந்து உள்ளார். அவருடைய அச்சத்தை போக்குவதற்காக காதலர் பவனேஷை கத்தியால் குத்தி கொலை செய்து முட்புதரில் வீசியுள்ளார் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.