8 முறை ஸ்கேன் எடுத்து பார்த்த போதும் பெண் குழந்தை..! ஆனால் பிறந்தது..! மருத்துவர்களையே அதிர வைத்த கர்ப்பிணி!

8 முறை ஸ்கேன் செய்து கருவில் இருப்பது பெண் குழந்தை என உறுதி செய்த நிலையில், பிறக்கும்போது ஆணாக பிறந்ததால் பெற்றோர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த சம்பவம் வடக்கு அயர்லாந்தில் நடைபெற்றது.


வடக்கு அயர்லாந்தில் சாரா ஹீனி, வில்லியம் கோவன் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறக்க விருக்கும் அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என ஆவலுடன் இருந்தனர். இதற்காக அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து வந்த அவர்கள் பல கட்டங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை பார்த்து அது பெண்தான் என உறுதி செய்தனர். 

இதற்காக தங்களுக்கு பிறக்க இருக்கும் பெண் பிள்ளையை வரவேற்க பிங்க் வண்ணத்தில் தங்களது வீட்டை அலங்கரித்தனர். பெண் குழந்தைகளுக்கே உரியதான ஆடைகள், விளையாட்டு பொம்மைகளையும் வாங்கி குவித்திருந்தனர். வீட்டில் இருந்த 2 பெண் குழந்கைளும் தங்களுக்கு அழகான சகோதரி கிடைக்கப் போகிறாள் என ஆசையாக இருந்தார்கள்.

சாரா கர்ப்பமாக இருந்த 17வது வாரம் முதலே மருத்துவர்களுடன் பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது.

ஆனால் பிரசவத்திற்கு முந்தை கட்டத்தில் செய்த ஸ்கேனில் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என தெரியவந்தது. 8 முறை ஸ்கேன் செய்த போது பெண் குழந்தை என உறுதி செய்யப்பட்ட நிலையில் எப்படி ஆண் குழந்தை பிறந்தது என பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கும் உரிய வரவேற்பு அளித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் அந்த தம்பதி.