சரக்கு ஏற்றும் குட்டி யானையில் ஆட்களை ஏற்றிச் சென்ற விபரீதம்! கிணற்றுக்குள் பாய்ந்ததில் 8 பேர் உயிர் பறிபோன கொடூரம்!+

கோவில் பூஜைக்கு சென்றபோது மினி லாரி ஒன்று கிணற்றில் விழுந்து 8 பேர் பலியான சம்பவமானது திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் முசிறி எனும் இடம் அமைந்துள்ளது. முசிறிக்கு அடுத்துள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இறைபக்தி உடையவர்கள். ஆடி மாதம் என்பதால் துறையூருக்கு அருகே உள்ள எஸ்.என்.புதூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக பேரூர் கிராமத்து பொதுமக்கள் மினி லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திருமனூர் எனும் கிராமத்திற்கு அருகே வண்டியின் டயர் வெடித்தது. டயர் வெடித்ததில் ஓட்டுநர் தன் கட்டுபாட்டை இழந்தார். வாகனம் ஒரு கிணற்றை நோக்கி வேகமாக சென்றது. கிணற்றுக்கு அருகே தடுப்பணைகள் வைக்கப்பட்டு இருப்பினும் அவற்றை உடைத்துக்கொண்டு கார் கிணற்றினுள் விழுந்தது.

கிணற்றினுள் விழுந்த அதிர்ச்சியில் பயணம் செய்து கொண்டிருந்த 22 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 3 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். 10 பேரை உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் காப்பாற்றியுள்ளனர். அவர்களை துறையூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேரூர் கிராமத்தை சேர்ந்த குணசீலன், சஞ்சனா, குமாரத்தி, கோமதி, கயல்விழி, எழிலரசி, கரண் குமார் ஆகியோர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 அடி ஆழத்தில் கிணறு உள்ளதால் மீட்பு பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.