மலப்புரம்: ஏழாம் வகுப்பு மாணவி கர்ப்பம் தரித்த புகாரில் ஆசிரியர் ஒருவர் சிக்கியுள்ளார்.
7ம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பம்! 30 வயது ஆசிரியரால் ஏற்பட்ட விபரீதம்!

கேரளாவில் வடக்கே உள்ள மலப்புரம் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு 7வது படிக்கும் சிறுமி ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். வயிற்று வலி காரணமாக, இவரை சில நாள் முன்பாக, பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, சிறுமி கர்ப்பம் தரித்த விசயம் தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, கடந்த சில மாதங்களாகவே மாணவியை, அவரது பள்ளி ஆசிரியர் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதில் மாணவி கர்ப்பம் தரித்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து மாணவியும், அவரது பெற்றோரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் தேடி வருவதால் குறிப்பிட்ட நபர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.