காஜல் அகர்வாலுக்கு ரூ.75 லட்சம்! கொட்டிக் கொடுத்த தொழில் அதிபர் மகன்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

நடிகை காஜல் அகர்வாலை வீட்டுக்கு வர வைப்பதாக கூறி ஆன்லைனில் பிரபல தொழிலதிபரின் மகனிடமிருந்து 75 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சினிமா தயாரிப்பாளர் சரவண குமார் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் .


ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் கூகுளில் காஜல்அகர்வாலை பார்த்து அவரை வீட்டுக்கு வர வைக்க ஆசைப்பட்டுள்ளார் . 

locanto என்ற இணையதளத்தின் மூலம் நடிகைகளை விரும்பிய இடத்திற்கு வர வைக்கலாம் என்று நண்பர்கள் சிலர் கூற , அந்த வெப்சைட்டில் பிரபல தொழிலதிபரின் மகன் ரிஜிஸ்டர் செய்துள்ளார் . ரிஜிஸ்டர் செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு ஒரு நபரிடமிருந்து  போன் கால் வந்துள்ளது.

அதில்  பேசிய அந்த மர்ம நபர் தொழிலதிபரின்  மகனுக்கு சில நடிகைகளின் போட்டோக்களை அனுப்பியதாகவும் அந்த போட்டோக்களில் தொழிலதிபரின் மகன் நடிகை காஜல் அகர்வாலின் போட்டோவை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது . 

பின்னர் அந்த தொழிலதிபரின் அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களை அனுப்புமாறும் , ரிஜிஸ்ட்ரேஷன் தொகையான  50 ரூபாயில் ரூபாயில், 25 ஆயிரம் ரூபாயை முன் பணமாகவும் அந்த மர்ம நபர் இவரை கட்ட சொல்லியுள்ளார் .நடிகை காஜல் அகர்வால் வீட்டிற்கு வருவார் என நம்பி இந்த தொழிலதிபரின் மகன்  அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் ஆகியவற்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் . 

இவரின் செல்போன் நம்பர், அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை வைத்து இவர் கோடீஸ்வரனின் மகன் என அறிந்த அந்த மர்ம நபர் , அவரிடமிருந்து மேலும் பணத்தை பறிப்பதற்காக நடிகை காஜல்  அகர்வாலுடன் அந்த தொழிலதிபரின் மகன்  நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை மார்பிங் செய்து அந்த தொழிலதிபரின் மகனுக்கு அனுப்பியுள்ளார் . அந்த புகைப்படத்தையும் மற்றும் செல்போன் உரையாடல்களையும் வைத்து அவரை மிரட்டி அந்த மர்ம நபர் கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் வரை அவரிடமிருந்து ஒரு ஒரு வங்கிக் கணக்கிற்கு அனுப்ப சொல்லி அவரிடமிருந்து மொத்த பணத்தையும் மோசடி செய்துள்ளார் .

 பணத்தையும் இழந்து மானத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அந்த தொழிலதிபரின் மகன் கொல்கத்தாவிற்கு சென்று தலைமறைவானார் . சில நாட்களுக்கு முன்பு அந்த தொழிலதிபரின் மகன் அவரது அப்பாவிற்கு போன் செய்து நான் சாகப் போகிறேன், எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி போனை கட் செய்துள்ளார் . இதனால் பதறிய  அந்த தொழிலதிபர் காவல்துறைக்கு உடனே இதை பற்றி அறிவித்துள்ளார் . காவல்துறையினர் அந்த போன் நம்பரை வைத்து ட்ராக் செய்து தொழிலதிபரின் மகன் கல்கத்தாவில் இருப்பதை கண்டறிந்து அவரை மீட்டெடுத்தனர் . 

பின்னர் காவல்துறையினர் அந்த வங்கிக் கணக்கு எண்ணை வைத்து அந்த அக்கவுண்டிற்கு சொந்தமான மணிகண்டன் என்பவரை விசாரித்தனர் . விசாரணைக்கு பின்பு மணிகண்டன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதாகவும் , அந்த படத்தின் தயாரிப்பாளர் சரவணகுமார் தான் என் வங்கி அக்கவுண்ட்டை பயன்படுத்தி மற்றவர்களிடம் பணத்தை பெற்று வருவதாக மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் , தயாரிப்பாளர் சரவண குமார் என்பவர் அசோக் நகரில் கைது செய்யப்பட்டார் .விசாரணைக்குப் பிறகு சரவணகுமார் தொழிலதிபர்  மகனிடம் ஏமாற்றி பெற்ற 75 லட்சம் ரூபாய் பணத்தில்  65 லட்சம் ரூபாயை உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் செலவு செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார் . அவரிடமிருந்த மீதமுள்ள 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் .

நடிகை காஜல் அகர்வாலின் பெயரை தவறாக பயன்படுத்தி பணமோசடி செய்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .