21 நாள் ஊரடங்கு..! ஒரே வீட்டில் 39 மனைவிகளுடன் பொழுதை கழித்து வரும் 72 வயது முதியவர்! எப்படி தெரியுமா?

72 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய 39 மனைவிகள் உட்பட 181 குடும்ப உறுப்பினர்களுடன் ஒரே வீட்டில் வசித்து சாதனை புரிந்து வருகிறார்.


மிசோரமில் உள்ள பக்தவங் என்ற கிராமத்தில் 72 வயது முதியவர் ஜியோனா சானா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 40 பேரக்குழந்தைகள் என 181 பேர் இந்த மெகா குடும்பத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக நான்கு மாடிகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை தயார் செய்து கொடுத்துள்ளார். அதில் அனைவரும் தங்குவதற்கு 100 அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 

இந்த குடும்பத்தில் உள்ள 181 பேருக்கு தினசரி உணவு சமைப்பதற்காக 50 கிலோ அரிசி செலவு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 70 கிலோ இறைச்சியும் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. விழாக்களுக்கு சமைப்பது போல தினமும் சமைத்து இவர்களுக்கு உணவு வழங்கப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 72 வயது முதியவர் ஜியோனா சானா தனது 39 மனைவிகள் உட்பட 181 குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலேயே நாட்களை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பம்  உலகின் மெகா குடும்பம் என்று சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.