நல்லா இருக்கும்..! ஒரே ஒரு டைம் பாரு..! கல்லூரி மாணவிக்கு காட்டக் கூடாததை காட்டிய 72 வயது மோகன் தாத்தா..!

சென்னையில் குழந்தைகள் ஆபாச வீடியோவை கல்லூரி மாணவிக்கு காட்டிய புகாரில் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை சூளைமேட்டை சேர்ந்த 72 வயது முதியவர் மோகன் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு வக்கிரப் புத்தி அதிகம் என்பதால் தன்னிடம் உள்ள ஐபேடில் எந்நேரமும் ஆபாச படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் ஒரு வேலையாக செய்து வந்துள்ளார். வட்டிக்கு விடும் தொழில செய்வதால் இவரிடம் பணத்துக்கு பஞ்சமில்லை.

எனவே இது ஒன்றே வேலையாக திரிந்துள்ளார். இதற்கிடையே வீட்டருகே வசிக்கும் கல்லூரி மாணவியை அழைத்த மோகன் அவருக்கு தன்னுடைய ஐபேடை கொடுத்து பார்க்குமாறு கூறியுள்ளார். அது என்னவென தெரியாமல் பார்த்த மாணவி அதில் திடீரெ குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோ வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி, போலீசில் புகார் தந்தார். இதையடுத்து மோகன் மீது போக்சோ சட்டத்தில் கைது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.  

சில ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரியில் கொடுத்த கடனை திருப்பி தராத பெண்களை தன்னுடைய காம வலையில் வீழ வைத்து அதை வீடியோவும் எடுத்து மிரட்டி வந்தார் வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவர். அதேபோல் இந்த மோகனும் வட்டித் தொழில் நடத்தி வருவதால் ஏதாவது வில்லங்கத்தில் ஈடுபட்டிருப்பாரோ என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் சிறார் ஆபாச படம் தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்டர்நெட் மையங்களிலும் போலீசார், சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படங்களை சேமித்து வைப்பதும், பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம். இப்படி செய்பவர்களுக்கு 3 முதல் 7 வருஷம் வரை சிறை தண்டனை தண்டனை கிடைக்கும் என காவல்துறை எச்சரித்துள்ளது.