கேன்டீனில் சர்வர் வேலை! போட்டி போட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்!

கேன்டீன் சர்வர் காலிப் பணியிடங்களுக்கு, பட்டதாரிகள் உள்பட 7000 பேர் போட்டியிடும் தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிராமாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது. அம்மாநிலத்தின் தலைமைச் செயலகமானமந்த்ராலயாவில் கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கேன்டீனில் சர்வராகபணிபுரிய 13 பேர் தேவைப்படுவதாக, அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

4ம் வகுப்பு கல்வித்தகுதியுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், 7000 பேர்வரை விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, சமீபத்தில் தகுதித் தேர்வு ஒன்றும்நடத்தப்பட்டது. இதில், விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆவர். கேன்டீன்சர்வர் பணிக்கு 25 முதல் 27 வயது வரையான பட்டதாரிகள் போட்டிபோடுவதை பார்த்துஅம்மாநில அரசு வியப்பில் ஆழ்ந்துள்ளது.

எனினும்,அரசாணையின்படி, 13 பேர் தற்போது சர்வர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில், 8 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். ஒருவர் மட்டும் ப்ளஸ் 2 படித்தவர் என்றநிலையில், மற்ற அனைவரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர். இவர்களிடம் தற்போதுசான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.

அதேசமயம்,விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, கூடுதல் பணியிடம் ஒதுக்கும்படி,பட்டதாரிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே, பட்டம்படித்தவர்களை கேன்டீன் சர்வராக பணியமர்த்தும் நிலைக்கு மகாராஷ்டிர சட்டமன்றஎதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய முண்டே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில்கல்வியின் தரம் கேவலமாக உள்ளதற்கு, இந்த சம்பவம் சாட்சி என்று அவர் கூறியுள்ளார்.எம்எல்ஏக்களை விடவும் அதிகம் படித்த நபர்கள் கேன்டீன் சர்வராக நியமிக்கப்படுவது,ஏற்புடையதல்ல என்றும், கல்விக்கு உரிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவது அவசியம்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மகாராஷ்டிரமாநிலத்தில் மட்டும் நடக்கும் சம்பவமல்ல. நம்மூரிலும் கூட, பிஹெச்டி படித்தவர்கள்குரூப் 4 தேர்வு எழுதும் வழக்கம் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தை திட்டும் பலர்,அரசாங்க வேலையை மட்டும் வாங்க போட்டிபோடுவது சற்று வேடிக்கையான விசயம்தான்.கல்விக்கு உண்டான வேலைவாய்ப்பை தேடுவதை விட்டுவிட்டு, வேலை செய்யாமல் சம்பளம்வாங்கலாம் என்ற நினைப்பில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்பவர்களை கண்டிக்கத்தான்வேண்டும்.