சீறி வந்த காளை! உயிர் பயத்தில் துடித்த பேரன்! தன் உயிரை கொடுத்து பாட்டி செய்த வீர தீரம்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தனது பேரனை தாக்க வந்த மாட்டை விலக்கி விட முயன்ற மூதாட்டி அந்த மாட்டிடம் சிக்கி உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.


அந்த 70 வயது பாட்டி வாக்கிங் செல்வதற்காக தனது 4 வயது பேரனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்ட போது அவருக்குத் தெரியாது நேரப்போகும் விபரீதம். அருகில் உள்ள திடல் ஒன்றில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு பாட்டி வாக்கிங் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு முரட்டு மாடு உள்ளே நுழைந்து பேரனை தாக்க முயன்றது.

இதையடுத்து பதற்றத்துடன் ஓடி வந்த பாட்டி, மாட்டை விலக்கி பேரனை காப்பாற்ற முயன்றார். இதையடுத்து மாட்டின் சீற்றம் பாட்டியை நோக்கி திரும்பியது. மாடு சரமாரியாக முட்டியதில் அந்த மூதாட்டி தலையில் பலத்த காயம் அடைந்து விழுந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அந்த மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூதாட்டி தாக்கப்பட்ட வீடியோ அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது