கள்ளக் காதலனுடன் தாய் உல்லாசம்! நேரில் பார்த்த 7வயது மகன்! கொடூரமாக தாக்கிய பயங்கரம்!

கேரளாவில் தாய் தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்த ஏழு வயது சிறுவனை மண்டையில் கொடூரமாக தாக்கிய தாயின் கள்ளக்காதலன்.


கேரள மாநிலத்தில் கணவனை இழந்த தாய் தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார் இதனைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தாய்க்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது ஒரு நாள் குழந்தைகள் உறங்கச் சென்ற பிறகு தாய் தனது கள்ளக் காதலனை அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த 7 வயது சிறுவன் தனது தாய் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்தான். பின்னர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது தாயின் கள்ளக்காதலன் அங்கிருந்த கம்பியால் பையனின் மண்டையில் கொடூரமாக தாக்கி உள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த நான்கு வயது சிறுவனையும் தாக்கியுள்ளார். தனது தம்பியின் தாக்குவதை பார்த்து அதிர்ந்த 7 வயது சிறுவன் அதை தடுக்க சென்றுள்ளார் அப்போது அவருக்கு மண்டையில் பலமாக அடிபட்டு மண்டையோடு உடைந்துள்ளது.

சத்தம்கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடிவந்து  பின்னர் தாயின் கள்ளக்காதலனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் அங்கு வந்து சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களை பற்றி மருத்துவர்கள் கூறியதாவது 7 வயது சிறுவனுக்கு மண்டையில் பலத்த காயங்களுடன் மண்டை ஓடு உடைந்து இருப்பதாகவும் அவருக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 4 வயது சிறுவனுக்கு சிறு சிறு காயங்களுடன் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் இருவரும் நலம் பெறுவர் எனக் கூறியுள்ளனர்.