உடல் முழுவதும் சிரங்குகள்..! திடீர் வாந்தி..! மூச்சுவிட போராட்டம்! குளிர் காற்று பட்டால் சிறுவனுக்கு ஏற்படும் விபரீதம்! அதிர வைக்கும் காரணம்!

லண்டன்: 7 வயது சிறுவனுக்கு, வித்தியாசமான அலர்ஜி நோய் ஏற்பட்டுள்ளது.


குளிர்காலம் என்றாலே ஒவ்வொருவருக்கும் குளிர் ஜூரம் வருவது, சளி பிடிப்பது என பலவித பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த டாமி லீய்ச் என்ற 7 வயது சிறுவனுக்கு, குளிர்காலத்தில், உடல் மிகவும் குளிர்ந்துவிடுகிறது. இதனால் படிப்படியாக, உடலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது.

இதன்படி உடல் முழுக்க சில்லென மாறி, சிவந்து, தடித்து விடுவதுடன், மூச்சிரைப்பு, சளி மற்றும் அடிக்கடி வாந்தி ஏற்படுவதால், சிறுவனது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது. உடல் குளிராமல் எந்நேரமும் வெதுவெதுப்பாகவே இருந்தால்தான் சிறுவனது உடல்நிலை இயல்பாகக் காணப்படும்.  

இதற்காகவே, சிறுவனை குளிர்காலத்தில் எந்நேரமும் உடல் முழுக்க பலவித துணிகளால் சுற்றி பாதுகாக்க வேண்டியிருப்பதாக, அவனது தாயார் குறிப்பிடுகிறார். குளிர்காலத்தில் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுவதால் குளிர்காலம் முழுக்க மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அவர் தெரிவிக்கிறார்.

கோடை காலம் முழுக்க இயல்பாகச் சென்றாலும்,குளிர் காலம் வந்தாலே சிறுவன் மருத்துவமனையிலேயே நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பிற்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும் என, மருத்துவர்களிடம் ஆலோசித்து வருவதாக, சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.