சாக்கு மூட்டை..! துர்நாற்றம்..! 7 வயது சிறுமியின் சடலம்! தாயின் உடல் சார்ந்த தேடலால் அரங்கேறிய பயங்கரம்!

காணாமல் போன சிறுமி பக்கத்து வீட்டு சாக்குப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு அனில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் ராமானம்மா. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுள்ளார். அணில் மதுபான கிடங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருடைய 7 வயது மகள் சென்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காணவில்லை. இதுக்குறித்து அனில் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். சிசிடிவி கேமராக்களில் ரயில்நிலையம், பேருந்து நிலையம், குண்டு குழி ஆகிய பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவித பயனும் இல்லை. 

அனில், தன்னுடைய உறவினர்களுக்கோ அல்லது அக்கம்பக்கத்தினருக்கோ சம்பந்தம் இருக்காது என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளார். இருப்பினும் காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. 

இதனிடையே அனிலின் பக்கத்து வீட்டுக்காரரான பிரகாஷ் என்பவரின் மனைவி வெளியூருக்கு சென்றிருந்தார். அவர் வீடு திரும்பியபோது சந்தேகிக்கும் வகையில் ஒரு சாக்குப்பை கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சாக்குப்பையை திறந்து பார்த்தபோது காணாமல் போன 7 வயது சிறுமியை அதனுள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையின் கழுத்தில் பிறந்த அடையாளங்களை வைத்து பார்த்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்ட வழக்கிலும் பிரகாசுக்கு தொடர்பிருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர். 

தொடர் விசாரணையில் சிறுமியின் தாயுக்கும் பிரகாசுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் உல்லாசமாக இருந்த போது துவாரகா பார்த்துள்ளார். அத்துடன் இதை தந்தையிடம் கூறப்போவதாகவும் துவாரகா கூறியுள்ளார். உடனடியாக கள்ளக்காதலனிடம் எதாவது செய்யுமாறு கூற, துவாரகாவை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.