அவன் உடம்பு எனக்கு தான் சொந்தம்..! ஒருவனுக்காக மல்லுகட்டிய ஏழு மனைவிகள்! அதிர வைக்கும் காரணம்!

தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு மனைவி என சொந்தம் கொண்டாடி ஏழுபேர் வந்த சம்பவத்தினால் போலீசார் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பவன் குமார், இவர் நிதி நெருக்கடி காரணமாக விஷம் அருந்தி உள்ளார். உடனடியாக பவன்குமார் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இவரை பரிசோதித்து பார்க்கையில், ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.

போலீஸ் தரப்பு இச்சம்பவம் வரைந்த ஏழு பெண்கள் இவர் என் கணவர் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் தற்கொலை சம்பவம் குறித்து அருகிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீஸ் தரப்பு விசாரிக்கையில், ஒருவருக்கு 7 பேர் மனைவியா? என போலீசார் மிகவும் குழம்பி இருக்கின்றனர். 

மேலும் ஒருவருக்கு மற்றொருவரை பற்றி தெரியாது என்பதும் கூடுதல் தகவல். இதனால் போலீஸ் தரப்பு செய்வதறியாது திகைத்து, இறுதியாக அனைவரையும் சமாதானப்படுத்தி இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிகழ்வு நடந்தேறியது.