ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை வீசப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடல் முழுவதும் எறும்புகள்! கொசுக்கள்! குப்பை தொட்டிக்குள் கதறிய பெண் குழந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே இருக்கும் ஓம் சக்தி கோவில் பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் 7 மாத பச்சிளம் குழந்தை வீசப்பட்டுள்ளது.
இதனை அப்பகுதியில் வசித்து வரும் செல்வி என்ற பெண் காலை 5 மணியளவில் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு வந்து பார்த்ததில் குப்பைத்தொட்டியில் கிடந்துள்ளது. குப்பை தொட்டியில் கொசு மற்றும் எறும்புகள் கடித்ததால் குழந்தையின் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குழந்தை யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டு வருகின்றன. பிறந்து 7 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இப்படி குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.