மகனுக்கு வரன் பார்க்க சென்ற குடும்பத்திற்கு நொடியில் நேர்ந்த பயங்கரம்! 7 பேர் பலியான பரிதாபம்!

விழுப்புரம் மற்றும் அரியலூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரும் இவரது குடும்பமும் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ள நிலையில் அவர்களை சந்திக்க அதிகாலை 6 மணி அளவில் கோவிலை நோக்கி சென்றுள்ளனர்.இந்நிலையில் வாடகைக்கு வாகனம் எடுத்து அதில் ஏழுமலை மற்றும் அவரின் உறவினர்களான சித்ரா ,பாலாஜி ஜெயக்கொடி, சாந்தி ஆகிய 5 நேரம் காரில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் போது கார் ஓட்டுநர் சிறிது தன்னை மறந்த நிலையில் தூக்க நிலைக்குச் சென்றுள்ளார்.அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் அருகில் இருந்த 15 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஏழுமலை சித்ரா ,பாலாஜி ,ஜெயக்கொடி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஓட்டுநர் மற்றும் சாந்தி ஆகிய இருவர்களை அருகிலிருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த கார் எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த 4 பேரை ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விசாரிக்கையில் அவர்கள் 7 பேரும் திருநள்ளாறு கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.

அப்போது ஓட்டுநர் ஆனந்தகுமார் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் காரை எதிரே உள்ள மணல் லாரியில் மீது மோதியதாக தெரிகிறது இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.