முதலிரவு அனுபவங்கள்..! இந்தியப் பெண்கள் 7 பேர் வெளியிட்ட உண்மை தகவல்கள்!

முதலிரவு நாள் அன்று உடலுறவுக்கு பதில் வேறு சில சமாச்சாரங்களை செய்வோம் என சில இந்திய பெண்கள் ருசிகரமான சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.


எங்கள் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்த ஒன்று. திருமணம் நடந்து முடிந்த நாள் அன்று உடல் முழுக்க சோர்வு மட்டுமே இருந்ததால் நானும், என் கணவரும் ஆங்கில சீரியல் பார்த்து சிரித்து மகிழ்ந்தோம். இன்று வரை அந்த முதலிரவு அனுபவத்தை மறக்கவே முடியாது என ஒரு பெண் தெரிவித்துள்ளார்.  

மற்றொரு பெண் தெரிவிக்கையில், இது எல்லாருடைய திருமணங்களிலும் நடப்பது தான். நாங்கள் திருமணத்தின்போது உடை, அலங்காரம், பந்தி உணவு போன்றவை பற்றி விமர்சித்த இருவீட்டார் உறவினர்களை முதலிரவன்று கேலி, கிண்டல் செய்து கழித்தோம் என கூறினார்.

மற்றொரு இந்திய பெண் முதலிரவு அனுபவத்தை கூறுகையில், உண்மையில் நாங்கள் சோர்வாக இருந்தோம். செக்ஸில் ஈடுபடுவதற்கான சக்தி 2 பேரிடமும் இல்லை. உடலும் ஒத்துழைக்கவில்லை. ஆகவே, உறங்கிவிட்டோம். மறுநாள் மதியம், உறவினர்கள் வந்து கதவை தட்டிய போது தான் எழுந்தோம் என தெரிவித்தார்.

4வது பெண் கூறுகையில், காலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன். எல்லா வேலையும் முடித்து பின்னர் ஆடைகளை மாற்றி, மேக்கப் நீக்கவே ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. எல்லாம் முடிந்து விடியலுக்கு சிறு நேரத்திற்கு முன் கட்டியணைத்துக் கொள்ள மட்டுமே எங்களுக்கு நேரம் மிஞ்சியது என கூறினார்.

5வது பெண் தெரிவிக்கையில், முதலிரவு என்பது எங்களுக்கு ஒரு அசௌகரியமான செயலாக இருந்தது. எனவே செக்ஸில் ஈடுபடாமல் கார்ட்ஸ் மற்றும் மொபைல் கேம்ஸ் ஏறத்தாழ ஓரிரு மணிநேரம் விளையாடினோம். அதில் சோர்வடைந்த பிறகு, உடலுறவை அனுபவித்தோம் என கூறினார். 

6வதாக ஒரு பெண், காதலித்து திருமணம் செய்த நாங்கள் முதலிரவன்று சோர்வு மட்டுமே உடலில் நிறைந்து இருந்தது. அவர் எனக்கு மசாஜ் செய்துவிட்டார். அவர் மசாஜ் செய்து முடிப்பதற்குள் நான் உறங்கிவிட்டேன் எனகூறினார். 

7வதாக ஒரு பெண், கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறந்துவிட்டோம். ஓட்டல் நிர்வாகத்தினர் குளியலறையில் பாத்டப் முழுக்க ரோஜா இதழ்கள், நறுமணம் பொங்கும் மெழுகுவர்த்திகள் என ரொமாண்டிக் மூட் செட் செய்து வைத்திருந்தனர். எங்கள் முதலிரவு ஒரு ரொமாண்டிக் குளியலோடு துவங்கியது என தெரிவித்தார்.