கோலப் போராட்டம் நடத்திய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு..! விசாரணையில் வெளிய பகீர் தகவல்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெசன்ட் நகரில் சில நாட்களுக்கு முன்னர் கோலம் போட்ட பெண் ஒருவருக்கு பாகிஸ்தான் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு தரப்பினரையும் காவல்துறையினர் கைது செய்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 7 பேர் சாலையில் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். அந்த கோலத்தில் மத்திய அரசுக்கு எதிரான தகவல்களையும் வரைந்து வைத்திருந்தனர். இந்நிலையில் காலையில் காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

இந்த அநாகரிக செயல்பாட்டிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அத்தகைய கண்டனங்களுக்கு பிறகு அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர். அடுத்தவர்களின் வீடுகளில் கோலம் போட்டதால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்பட்டது. இந்த சம்பவமானது பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி கந்தாதே. இவருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அமைப்புடன் தொடர்பிருப்பதாக விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் அரசுக்கு எதிராக போராடும் பல்வேறு இயக்கங்களுடன் காயத்ரி தொடர்பிலிருந்து வருவதாகவும், இதற்கான விசாரணை தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவலானது பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.