8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவர் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாத்தா அப்டி பண்ணாதீங்க..! 55 வயது கிழத்திடம் கதறிய 8 வயது சிறுமி! சென்னை அதிர்ச்சி!

சென்னை புறநகரில் கொடுங்கையூர் எனும் இடம் அமைந்துள்ளது. எருக்கஞ்சேரி-தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 69. இவர் அப்பகுதியில் சொந்த வீடு ஒன்று வைத்திருக்கிறார். அதில் ஒரு தம்பதியினர் வாடகைக்காக தங்கியுள்ளனர்.
அத்தம்பதியினருக்கு ஒரு 8 வயது பெண் குழந்தை உள்ளது. இதனிடையே அந்த பெண் குழந்தையிடம் ஜெயபிரகாஷ் பாலியல் ரீதியில் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையின் பெற்றோர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஜெயபிரகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.