அவருக்கு 77..! எனக்கு 68..! திருமணமாகி 46 வருடங்களுக்கு பிறகு தாய் - தந்தையான ஜோடி..! சாத்தியமானது எப்படி? அதிசயிக்க வைக்கும் தகவல்!

68 வயதில் மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தை பெற்றெடுத்திருப்பது நைஜீரியா நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் நோ அடெங்யுகா. இவருடைய வயது 77. இவருடைய மனைவியின் பெயர் மார்கரெட். இருவரும் 1974-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியமில்லை. ஆதலால் கருத்தரிப்பு முயற்சிகளை தம்பதியினர் மேற்கொண்டுள்ளனர். ஆனால் 3 முறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், சென்ற ஆண்டு கடைசி முயற்சியில் மார்கரெட் கருவுற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். 68 வயதில் கர்ப்பிணியானதால், இவரை கண்காணிப்பதற்கு ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது. 37 வாரங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மார்கரெட் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இதுகுறித்து நோ அடெங்யுகா கூறுகையில், "இயற்கையாக எங்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்பது தெரிந்து நாங்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து கருத்தரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தோம். உங்களுடைய முயற்சிகள் முழுமனதாக இருந்ததால் என் மனைவி தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்" என்று மகிழ்ச்சியாக கூறினார்.

மார்கரெட் பிரசவத்தை பார்த்த மருத்துவர் கூறுகையில், "68 வயதான பெண் முதல் முறையாக பிரசவத்தை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானதாகும். அதிலும் இவருக்கு இரட்டை குழந்தை கருவுற்றிருந்தை அவருக்கு தெளிவுபடுத்தி, மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வுகளை கூறினோம். கருத்தரிப்பு முறை மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கும் போது பிரசவம் மிகவும் சிக்கலாக இருக்கும். நன்றாக பிரசவித்த பிறக்கும் குழந்தைகளுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதனால் நாங்கள் மிகவும் நேர்த்தியாக இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தோம்" என்று பெருமிதம் கொண்டார்.


இந்த செய்தியானது நைஜீரியா நாட்டில் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.