ஹாஸ்பிடலில் கட்டிப்பிடித்து முத்தம்! 63 வயது கிழ டாக்டரால் நேர்ந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

14 வயதுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட 63 வயது டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பையின் கர் என்ற இடத்தில் சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்ற ஒரு பெண் தனது சாவிகளை மருத்துவமனையில் தவற விட்டு வந்துவிட்டதாகவும், வீட்டுக்கு வந்த பின் சாவிகளை எடுத்து வருமாறு தனது 14 வயது மகளை பணித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற சிறுமியிடம் தனிமையை பயன்படுத்தி மருத்துவர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சிறுமியை மருத்துவர் கட்டிப்பிடித்ததாகவும், முத்தம் கொடுத்ததாகவும்,பாலியல் பலாத்கார முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து பெரியவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகத் தப்பித்து வீட்டுக்கு வந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூற அவர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதே போன்ற மற்றொரு சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் உரான் என்ற இடத்தில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகக் கமிட்டித்தலைவர் ஒருவர் பள்ளியில் படித்த 1-ஆம் வகுப்புச் சிறுமியை காலியான ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறிய நிலையில் அதனை ஜன்னல் வழியா பார்த்த மற்ற குழந்தைகள் கூச்சலிட அவர் சிக்கிக் கொண்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.