13 வயது இளம்பெண்ணை ஆசை காட்டி ஏமாற்றி உடலுறவு கொண்ட முதியவர் கைது செய்யப்பட்டிருப்பது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 13 வயது தான்! 8ம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது காமுகன்! திருவண்ணாமலை அதிர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு என்னும் இடம் அமைந்துள்ளது. செய்யாறு பகுதிக்கு அருகேயுள்ள அனக்காவூர் எனும் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய வயது 13.
அனக்காவூருக்கு அருகேயுள்ள திருவத்திரம் என்னும் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இதனிடையே இவர் பாதிக்கப்பட்ட மாணவியுடன் கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகியுள்ளார். பின்னர் ஆசை வார்த்தை கூறி மாணவியை ஏமாற்றி அவரை கர்ப்பமாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி நிகழ்ந்தவற்றை தன் தாயாரிடம் கூறி அழுதுள்ளார். உடனடியாக மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவமானது செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.