தங்கையின் கருமுட்டை! தாயின் கருப் பை! 61 வயது பெண்மணிக்கு பிறந்த விநோத குழந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் வேறு ஒருவரின் கருமுட்டையை பெற்று சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது


அமெரிக்காவை சேர்ந்த cecil என்பவரது மகன் மேத்யூ என்பவருக்கு ஓரின சேர்க்கையில் அதீத விருப்பம் இருந்தமையால் eliyad dougherty என்ற ஆண் நபரை மணம் முடிந்து கொண்டார்.

இந்நிலையில் இருவரும் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தனர். அதன்படி வாடகைத் தாயை தேட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மேத்யூ தனது 61  வயதான தாயை அணுகி வாடகை தாயாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மெனோபாஸ் நிலையை அடைந்த அவரால் கருமுட்டையை உருவாக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால் மேத்யூவின் துணைவரான எலியட் அவரது தங்கையிடம் இருந்து கருமுட்டையை பெற்று அதை Cecilக்கு செலுத்தி குழந்தை பெற முயன்றனர்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன்பின் இதற்கு சம்மதமா என்று மருத்துவர்கள் கேட்கும் பட்சத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் என் குழந்தையை பெற்ற அதே மனநிலையை உணர்கிறேன் மீண்டும் நான் தாயாக மாறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று cecil தெரிவித்தார்.

பின் எலியட் அவரது தங்கையிடம் இருந்து பெற்ற கருமுட்டையை cecilக்கு செலுத்தி மேற்கொண்ட முதல் சோதனையிலையே வெற்றிகரமாக அவர் கருவுற்றார். இதையடுத்து மார்ச் 25 ஆம் தேதி 15 பவுண்ட் எடை கொண்ட ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் cecil. 61 வயதில் 15 பவுண்ட் எடை கொண்ட ஒரு குழந்தையை சுகப்பிரசவத்தில் அவர் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.