அந்த தாத்தா மம்மு கொடுத்தாரு..! அப்புறம் இப்படி செஞ்சாரு..! வலியில் கதறிய 4 வயது சிறுமி! சிக்கிய 60 வயது கிழட்டு கொடூரன்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 60 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதால் போலீசார் அவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராமதாஸ் . அவருக்கு வயது 60. இவர் அந்த பகுதியில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பெட்டிகடையில் கண் கவரும் விதமாக சாக்லேட்களையும் இனிப்பு வகைகளையும் அவர் விற்பனை செய்து வருகிறார் . இதனால் இவருக்கு சிறுவர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ராமதாஸ் தன் கடைக்கு வரும் இளம் பிஞ்சுகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதிலும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான சீண்டல்களை செய்வதையும் தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் . அதாவது அந்த குழந்தைகளின் உடலில் தவறான இடங்களில் கை வைப்பது போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

ராமதாஸ் அப்படியாக 4வயது சிறுமியிடம் தன்னுடைய சில்மிஷத்தை காட்டியிருக்கிறார். அதாவது 4 வயது சிறுமி ஒருவர் ராமதாஸின் கடைக்கு இனிப்பு வாங்குவதற்காக வந்திருக்கிறார். அவ்வராக வந்த சிறுமியிடம் ராமதாஸ் பாலியல் சீண்டல்களை செய்திருக்கிறார். இதனால் அச்சம் அடைந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை கூறி இருக்கிறார். அவரது பெற்றோர் ராமதாஸ் மீது கடும் கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர்.

அதுமட்டுமில்லாமல் கும்மிடிபூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமதாஸ் மீது புகார் அளித்தனர். பெற்றுக்கொண்ட புகாரின் அடிப்படையில் போலீசார் ராமதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் அவர் மீது ஒரு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.