திருமணமாகி 6 ஆண்டுகள்! குழந்தை இன்மை! உறவினர்கள் டார்ச்சர்! 24 வயது அமலா எடுத்த விபரீத முடிவு!

பெரம்பலூர் மாவட்டத்தில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை பகுதியைச் சேர்ந்த அயன்பேரையூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அமலா என்ற பெண்ணிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில் அமலா கர்ப்பம் தரிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் அமலா சில வருடங்களாகவே மனமுடைந்து காணப்பட்டார் வெளியில் எந்த ஒரு விஷேஷத்திற்கும் செல்லாமலும் இருந்துள்ளார். வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடமும் அதிகமாக பேசாமலும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அறிந்த அவரது கணவர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களது உறவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த களத்தூர் காவல்துறையினர் அமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.