டைல்ஸ் கல்லால் ஓங்கி ஒரு அடி! 3வது மாடியில் இருந்து தூக்கி வீச்சு! கணவனின் முதல் மகளுக்கு சித்தியால் ஏற்பட்ட பயங்கரம்!

தனது கணவர் இரண்டாவத்ய் குழந்தை வேண்டாம் என சொன்ன ஆத்திரத்தில் 6 வயது சிறுனையை தலையில் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். திருமணமாகி 6 வயது பெண்குழந்தை இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக முதல் மனைவி இறந்துவிட, மற்றொரு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. 

இரண்டாவதாக பார்த்திபன் - சூரியகலா என்ற பெண்னை மணந்து அவருக்கு 1 வயது ஆண் குழந்தை இருக்கிறது, இந்த நிலையில் மனைவி சூர்ய கலா மீண்டுமாக கருவுற்றதை அடுத்து, கணவர் பார்த்திபன் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் இந்த குழந்தை வேண்டாம் கலைத்து விடு என கூற ஆத்திரமடைந்த சித்தி சூர்யகலா சிறுமி ராகவி மீது கோபத்தில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் பாட்டியிடம் வளர்ந்து வந்த சிறுமி ,சித்தி சூர்யகலாவுடன் தனியாக வீட்டில் இருந்த நேரம் பார்த்து, கணவர் பார்த்திபனுக்கு போனில் மகளை காணவில்லை என பதறியபடி கூறியவர். 

குழந்தை 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார், விசாரணை போது மாடியில் இருந்து குழந்தை விழ வாய்ப்புகள் குறைவு என உறுதி படுத்திய போலீசார், 

சித்தி சூர்ய கலாவை கிடுக்குபிடியில் விசாரித்த போது சிறுமியை டைல்ஸ் கல்லால் தலையில் அடித்து அருகில் இருந்த புதரில் சித்தியே தூக்கி எறிந்த உண்மை அம்பலமானது. 

இதனை அடுத்து சித்தி சூர்யகலா கைது செய்யபட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடவுள்ளார் என கூறபடுகிறது