22 பெண்கள்! 29 ஆண்கள்! ஒன்று சேர்ந்து முதியவர்கள் 6 பேரின் பற்களை அடித்து உடைத்த கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

6 முதியவர்களின் பற்களை வெறிகொண்டு பிடுங்கிய 29 பெண் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமானது கோபாபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்குட்பட்ட கோபாபூர் என்ற கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. 3 நடுத்தர வயது பெண்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர். இதனால் அம்மாவட்டத்தில் மக்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். தங்களுடைய கிராமத்திற்கு யாரோ தீண்டத்தகாத வகையில் பில்லி,சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதினர்.

இந்நிலையில் கிராம பொதுமக்களுக்கு அங்கு வசிக்கும் 6 முதியவர்களின் மீது சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களின் பற்களை பிடுங்குவதற்கு அவர்கள் முடிவு செய்தனர். நேற்று காலையில் பொதுமக்கள்அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவர்களை அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் கற்களை வீசியும், இடுக்கியால் பிடுங்கியும் அவர்களுடைய பற்களை குதறி எடுத்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட அவர்களை மீட்டெடுத்து அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட 29 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கோபாபூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.