ஆஸ்திரேலியா டூ சென்னை..! தூங்கிக் கொண்டே வந்த குழந்தை..! ஏர்போர்ட்டில் சோதித்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி! கதறித்துடித்த தாய்!

ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்ட 6 மாதக் கைக்குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.


சக்திமுருகன், கீதா பொறியாளர்கள் தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்தியா வர முடிவு செய்து சக்திமுருகன், மனைவி கீதா, கீதாவின் தாயார் பிரிட்டோ குயின் மற்றும் 6 மாதக் கைக்குழந்தை ஹர்த்திக் ஆகியோர் சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார் தாய் கீதா, பின்னர் குழந்தை தூங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். சென்னை வந்து பார்த்ததும் குழந்தையின் உடலில் அசைவு இல்லை. இதனால் பயந்து போன தம்பதி விமான நிலையை மருத்துவர்களின் உதவியை நாடினர்.

அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்து 2 மணிநேரத்திற்கு முன்னே குழந்தை இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் அளித்தனர். குழந்தையின் உடல் எல்லாம் குளிர்ந்து போய் இருப்பதை அப்போதுதான் பார்த்துள்ளனர் தம்பதி. குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னதை கேட்டு கதறி அழுந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு பால் கொடுக்கும்போது சில தாய்மார்கள் மார்புடன் அனைத்து பிடித்துக்கொள்வர். அப்படி சிலர் பிடிக்கும்போது குழந்தை மூச்சுவிட கஷ்டப்படும். இந்த சம்பவத்திலும் குழந்தைக்கு அதுபோல் மூச்சு விட முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.