மதுரை மல்லிகாவும் வத்தலகுண்டு வீடும்..! வாடிக்கையாளர்கள் வரிசை கட்ட விபச்சாரத்தில் ஓஹோ..! ஆனால்?

வீட்டிலேயே விபச்சாரம் நடத்திய குற்றத்திற்காக 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது வத்தலகுண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வத்தலகுண்டு அருகே மேலகோவில்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. காவல் ஆய்வாளர் மற்றும்இணை ஆய்வாளர் காவல் படையுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்துவந்தது உறுதிப்படுத்தினர். விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மல்லிகா என்ற 25 வயது இளம்பெண், பாண்டி மீனா என்ற 30 வயது பெண் ஆகியோரை காவல்துறையினர் மீட்டெடுத்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆசைக்குமார் (30), விவேக் (25), சிவகுமார் (45), தங்கப்பழம் (45) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.