55 வயது பெண் வயிற்றில் நான்கரை கிலோ புற்று நோய் கட்டி! டாக்டர்களையே அதிர வைத்த விபரீதம்!

புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து 4.5 கிலோ மதிப்புடைய புற்றுநோய்க்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.


புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் தேவி என்ற 55 வயது பெண்மணி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புப் பகுதியில் ஒரு பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை ஆய்வு செய்த மகப்பேறு மருத்துவர்கள் இதுபற்றி புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் முரளியை ஆலோசித்தனர்.

முடிவாக, அந்த பெண்ணிற்கு, 4.5 கிலோ எடையில் புற்றுநோய் கட்டி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவக்குழு, கடந்த செப்டம்பர் 9ம் தேதியன்று, 4 மணிநேரம் போராடி, அந்த புற்றுநோய் கட்டியை அகற்றி சாதித்துள்ளது.  

தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளார். இது நரம்பில் இருந்து உருவான ரெட்ரோ பெரிடோனியல் ட்யூமர் எனும் வகை கட்டியாகும். தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 லட்சம் செலவாகும் என்ற சூழலில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது