வீட்டில் தனிமையில் இருந்த 54 வயது கண் தெரியாத பெண்மணி..! ஊரடங்கை பயன்படுத்தி உள்ளே புகுந்த இளைஞன் அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

வட இந்தியாவில் அமைந்திருக்கும் போபாலில் வீட்டில் தனிமையில் இருந்த 54 வயது கண் தெரியாத பெண்மணியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் நிலவிவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் நம் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக காணப்படுகிறது. இன்னிலையில் இந்த ஆள் நடமாட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் வட இந்தியாவில் உள்ள போபால் அப்பகுதியை சேர்ந்த 54 வயது பார்வை இழந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

அதாவது 54 வயதாகும் இந்த பெண் அபார்ட்மென்ட் ஒன்றில் இரண்டாவது தளத்தில் தன்னுடைய கணவருடன் வசித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு சென்ற அந்த பெண்ணின் கணவர் போக்குவரத்து வசதி இல்லாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கிறார். இந்த பெண் தனியாக தன்னுடைய வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட அந்த மர்ம நபர் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறார். ஆகையால் இந்தப் பெண்ணின் பால்கனி கதவுகளின் வழியாக அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து பார்வையிழந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனை அடுத்து பார்வையிழந்த அந்தப் பெண் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளித்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவால் ஆள் நடமாட்டமில்லாதை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.