54 வயதில் ஆசை நாயகனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..! கண்டுபிடித்த கணவன் நள்ளிரவில் அரங்கேற்றிய பயங்கரம்! நெல்லை அதிர்ச்சி!

வயது அதிகமானதற்கு பிறகு மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த கணவர் அவரை கொலை செய்த சம்பவமானது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பொன்இசக்கி. இவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் முத்துலட்சுமி. முத்துலட்சுமியின் வயது 54. இத்தம்பதியினருக்கு மொத்தம் 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் முத்துலட்சுமி அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக பொன் இசக்கி கண்டறிந்துள்ளார். இதுகுறித்து பலமுறை அவர் தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் முத்துலட்சுமி எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின.

2 நாட்களுக்கு முன்னர் மகள்கள் இருவரும் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வழக்கம்போல கணவன்-மனைவி சண்டை போட்டு கொண்டுள்ளனர். இன்று அதிகாலை இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த கணவர் முத்துலட்சுமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

கொலை செய்த உடன் நேரடியாக தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று பொன் இசக்கி சரணடைந்தார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில்மனைவியின் தவறான நடத்தையினால் ஆத்திரமடைந்து பொன் இசக்கி மனைவியை கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.