52 வயது மூதாட்டி மீது மோகம்..! வரம்பு மீறிய 17 வயது சிறுவன்! பிறகு நேர்ந்த விபரீதம்! நெல்லை அதிர்ச்சி!

திருநெல்வேலி சீர்திருத்த பள்ளியில் சிறுவன் ஒருன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தல் அது கொலை என தெரியவந்துள்ளது.


நெல்லை மாவட்டம் மேலப்பாட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேல்ராஜ் என்ற சிறுவன் கூலிவேலை செய்து வந்தான். இவர் மீது அதே ஊரை சேர்ந்த 52 வயது பெண் பச்சாத்தா அந்த சிறுவன் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டினார். பின்னர் உறவினர்களுடன் பச்சாத்தா போலீஸ் நிலையத்திற்கு செல்ல அந்த சிறுவன் பூச்சிமருந்து குடித்துவிட்டாக கூறப்படுகிறது. 

பின்னர் அந்த சிறுவனை பெண்ணின் உறவினர்கள் வடகரை காவல்நிலையம் சென்று சிறுவன் 52 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் போலீசில் புகார் அளிக்க புறப்பட்டபோது பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும் கூறி உள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்துவிட்டு அன்று இரவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

முறையான சிகிச்சை பெறாத சிறுவனுக்கு வாந்தி, பேதி, வயிறு வலி ஏற்பட்டு சில தினங்களில் வேல்ராஜ் உயிரிழந்துவிட்டான். பின்னர் சிறுவன் மரணம் தற்கொலை என வழக்குப் பதியப்பட்டது.

தன் மீது போலிசில் புகார் அளித்ததால்தான் அவமானம் தாங்காமல் பூச்சி மருந்து குடித்துவிட்டு சிறுவன் உயிரிழப்பு போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில்சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும், சமூக அமைப்பும் போராட்டத்தில் குதிக்க வேல்ராஜ் கொல்லப்பட்ட பரபரப்பு வம்பவம் வெளியில் வரத் தொடங்கி உள்ளது. 

அதாவது சிறுவனை காவல்நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றபோது ஒரு காட்டுப்பகுதியில் பாலியல் புகார் அளித்த பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர். உடலில் இருந்த பிறப்புறுப்பு உள்ளிட்டவற்றை கொடூரமாக அடித்துள்ளனர். பின்னர் அவன் வாயில் எதையோ கட்டாயமாக ஊற்றி பின்னர் சாம்பவர் வடகரை காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இவை அனைத்தும் சீர்திருத்த பள்ளியில் இருந்தபோது பெற்றோருக்கு சிறுவன் தெரிவித்துள்ளான்.