வயிற்று வலியால் துடித்து ஹாஸ்பிடல் வந்த முதியவர்! ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ந்து நின்ற டாக்டர்கள்!

தாய்லாந்தில் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்த முதியவரின் வயிற்றில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தாய்லாந்து நாட்டில் 52 வயதான நபர் ஒருவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆரம்பத்தில் ஏதோ சாதாரண பிரச்சனையாக இருக்கும் என கருதிய முதியவர் மிகவும் அஜாக்கிரதையாக விட்டு விட்டார். ஒவ்வொரு முறை வயிற்று வலி வரும்போது ஏதோ ஒரு வலி நிவாரணி சாப்பிட்டு காலம் கடத்தி வந்துள்ளார். 

ஆனால் அவரது வலிநிவாரணிகளை மதிக்காத கட்டி ஒன்று அவரது வயிற்றில் குழந்தை போல் மெதுவாக வளர்ந்து தற்போது பெரிய கட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வயிற்று வலி அதிகமாகவே பியுங்கன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஸ்கென் எடுத்தார். அப்போது அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதை கேட்டு முதியவர் அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இன்னும் தாமதித்தால் கல்லீரல், செரிமான பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சுமார் 35 செ.மீ. நீளம் 35 செ.மீ. அகலம் என 5 கிலோ எடை உள்ள கட்டியை அவரது வயிற்றில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

ஒருவேளை புற்றுநோய் பாதிப்பால் அவரது வயிற்றில் கட்டி வளர்ந்ததா என மருத்துவர்கள் மேலும் அவரை பரிசோதித்து வருகின்றனர். வயிறு உப்பசமாக இருந்தாலே குழந்தைதான் என்று நினைக்கும் யுகத்தில் அது கட்டியாகவும் இருக்கலாம் என யோசிக்க வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.