11 வயதில் இருந்து 500 பேர்.. ஒரே இரவில் 10 பேர்..! 40 வயது பெண்மணி வெளியிட்ட அதிர் வைக்கும் தகவல்!

தன்னுடைய 11-வது வயதில் 500-க்கும் மேற்பட்டோர் தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் டெல்ஃபோர்ட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் தன்னுடைய வாழ்வில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

அவருக்கு 11 வயது முதல் 19 வயது வரை நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை தற்போது அவர் ஊடகத்திலும் பகிர்ந்துள்ளார். 1980-களில் முதன் முதலில் அவர் வேறொரு ஆணிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். அவர் தன்னை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறினார்.

11 வயது முதல் 19 வயது வரை தினமும் தன்னை 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் கற்பழித்ததாகவும், குறிப்பாக 11-ஆம் வயதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் தன்னை கற்பழித்ததாகவும் கூறியுள்ளார். 

இந்த தொந்தரவுகளினால் படிப்பில் அவரால் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை. மேலும் கல்லூரியில் வருகைப் பதிவு சரியாக இல்லாததால் ஆசிரியர்கள் இவரை புறக்கணித்துள்ளனர். 19 வயதில் காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த இன்னல்களை புகாராக தர முடிவெடுத்தார். ஆனால் காவலர்கள் அவருடைய நடத்தையை சந்தேகித்து கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறியுள்ளார்.

பல ஆண்கள் துப்பாக்கி முனையில் தன்னை கற்பழித்ததாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த சம்பவமானது லண்டன் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.