விழுப்புரம்: வீட்டு வாசலில் நின்று குளித்தால் வீடியோ எடுப்போம்..! 2 பெண்களுக்கு 5 ஆண்களால் ஏற்பட்ட அதிர்ச்சி!

இளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தபோது வீடியோ எடுத்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டிருப்பது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கண்டாச்சிபுரம் என்ற பகுதிக்கு அருகே அருணாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு முத்துக்குமார் (20), தக்ஷிணாமூர்த்தி (22), மகேந்திரன் (22), பிரகாஷ் (20) விஜி (25) ஆகிய இளைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் நண்பர்களாவர். இவர்களுக்கு அதே கிராமத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் மீது காம இச்சை இருந்துள்ளது.

அந்த பெண் தன்னுடைய வீட்டிற்கு முன்பு குளிக்க சென்றதை அறிந்துகொண்ட இவர்கள், குளிக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுக்க தயாராகினர். 2 இளம்பெண்களும் வீட்டின் முன் நின்று குளித்து கொண்டிருந்ததை 5 பேர் தங்களுடைய செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனை தெரிந்தவுடன் இளம்பெண்கள் உறவினர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் முறையிட்டனர். ஆனாலும் அந்த இளைஞர்கள் தெனாவட்டாக நியாயம் கேட்க சென்றவர்களை ஆபாசமாக திட்டியுள்ளனர். அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 5 இளைஞர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பிரகாஷ் மற்றும் விஜி ஆகியோரை மட்டுமே காவல்துறையினரால் கைது செய்ய முடிந்தது. மற்ற மூவரும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.