5 இளைஞர்கள் மசாஜ் சென்டருக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவமானது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மசாஜ் சென்டருக்குள் புகுந்த இளைஞர்கள்! இடுப்பில் இருந்து எடுத்த பொருள்! அலறிய பெண்கள்! பிறகு நேர்ந்த பகீர் சம்பவம்! காஞ்சிபுரம் பரபரப்பு!

காஞ்சிபுரம் எல்லையில் கேளம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ளே ஏகாட்டூரில் "சைன் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர்" என்ற மசாஜ் நிறுவனமானது இயங்கி வருகிறது. சென்ற மாதம் 28-ஆம் தேதியன்று 2 இளைஞர்கள் மசாஜ் சென்டருக்குள் காலை நேரத்தில் நுழைந்துள்ளனர். சென்டருக்குள் இருந்த பெண்ணிடம் தவறாகப் பேசியதால் அவர் இருவரையும் வெளியேறும்படி கூறியுள்ளார். அப்போது இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர்.
மசாஜ் சென்டரில் வந்திருந்த வயதான பெண்மணி இந்த சம்பவங்களை அறியாமல் வெளியேறியுள்ளார். வெளியே நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் கத்தியை காட்டி அவரை உள்ளே இழுத்து சென்றுள்ளனர்.
5 பேரும் ஒன்றிணைந்து தங்களிடம் இருந்த ஆயுதங்களை காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் இருந்த நகைகளை 2 இளைஞர்கள் பறித்துள்ளனர். மீதி இளைஞர்கள் அனைவரின் பர்சிலிருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்தோர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சென்டரில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் காட்சிகள் தெளிவாக இருந்ததால் சம்பந்தப்பட்ட 5 இளைஞர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த வினோத், விஜய் பிரபாகரன் , அஜய், சசிகுமார், ஜெகதீசன் ஆகிய 5 பேர்தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் வினோத் தவிர மீது அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாகியுள்ள வினோத்தை கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.