திருமணமாக 5 ஆண்டுகள்..! குழந்தை இல்லை..! கணவன் கேட்ட கேள்வி! மனம் உடைந்த மனைவி எடுத்த முடிவு!

கோவை மாநகரில் திருமணம் ஆன 5 ஆண்டுகளில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை மாநகரத்திற்கு உட்பட்ட கீரநத்தம் பகுதியில் நடன பயிற்சியாளர் நரேந்திரன் மனைவி நித்யாவுடன் வசித்து வந்தார். நரேந்திரனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நித்யாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது. 

கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவர் இப்படி சண்டை போடுகிறாரே என நித்யா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனை மனதில் வைத்தே சண்டை நடைபெற்றுள்ளது. அப்போது குழந்தை இல்லாததற்கு யார் காரணம் என்கிற ரீதியில் கணவன் கேள்வி எழுப்பி சண்டையிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நித்யா வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நித்யா தற்கொலை செய்து கொண்டது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தூக்கில் சடலமாக இருந்த நித்யா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நித்யா தற்கொலை குறித்து வழக்குப்பதிந்த போலீசார் கணவர் நரேந்திரன் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 வருடத்திலேயே நித்யா தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அவரது தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.