2 புரோக்கர்கள்! 3 வாடிக்கையாளர்கள்! சில அழகிகள்! வசமாக சிக்கிய விபச்சார கும்பல்!

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் விபசாரம் செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அங்குள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில், பேய்ரீ எனும் இடம் உள்ளது. இங்கு, ஜகன்னாத் விஹார் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் விபசார தொழில் நடப்பதாக, தர்மசாலா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் , அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 2 புரோக்கர்கள், 3 வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பெண்ணையும் போலீசார் மீட்டனர். 

அதேசமயம், போலீஸ் சோதனையை முன்கூட்டியே தெரிந்துகொண்ட, இந்த விபசார கும்பலின் தலைவி தப்பியோடிவிட்டார். அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.