திருமணமாகி 7 மாதத்தில் 5 மாத கர்ப்பம்! நடு வீட்டில் சடலமாக தொங்கிய கர்ப்பிணி! தந்தை வெளியிட்ட பகீர் தகவல்!

5 மாத கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே ஆனத்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கணேஷ்பாபு என்ற 28 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு 7 மாதங்களுக்கு முன்னர் தொட்டிமேடு என்னும் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருடைய மகனான சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சூர்யாவின் வயது 20.

கணேஷ்பாபு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் சோப்பு நிறுவன கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சூர்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. 

நேற்று மாலை மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணேஷ்பாபு சூர்யாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சூர்யா மிகவும் மனவேதனை அடைந்தார். சில மணி நேரத்திற்கு பிறகு சூர்யா தூக்கில் தொங்குவதாக கணேஷ்பாபு பாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.

உடனடியாக பாலகிருஷ்ணன் தன்னுடைய உறவினர்களுடன் கணேஷ்பாபு வீட்டிற்கு சென்று சூர்யாவை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனிடையே சூர்யாவின் தற்கொலை குறித்து பாலகிருஷ்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.  புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் புகாரில் முகாந்திரம் இருப்பதை புரிந்துக்கொண்ட காவல்துறையினர் கணேஷ்பாபு மற்றும் அவரது தாயாரான லட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.